"நீயெல்லாம் பெரிய ரவுடின்னு வெளியே சொல்லி விடாதே” இகழ்ந்து பேசியதால் ரவுடி கழுத்தறுத்துக் கொலை - இருவர் கைது

0 2488

கன்னியாகுமரி அருகே, தன்னை இகழ்ந்து பேசிய ரவுடியை திட்டமிட்டு கழுத்தை அறுத்துக் கொலை செய்த ரவுடியையும் அவனது நண்பனையும் போலீசார் கைது செய்தனர்.

களியக்காவிளையைச் சேர்ந்த பிரபல ரவுடியான ரீகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அஜின் ஜோஸ் என்ற ரவுடியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு இருவரும் ஒன்றாக மது அருந்தி வந்த நிலையில் ரீகன், அஜின் ஜோஸை நீயெல்லாம் பெரிய ரவுடின்னு வெளியே சொல்லிவிடாதே எனக்கூறி இகழ்ந்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜின் ஜோஸ், ரீகனை கொலை செய்ய திட்டம் தீட்டி பிளிப்கார்ட்டில் கத்தியை ஆர்டர் செய்துள்ளான்.

பின்னர் தனது நண்பன் அசோக்குடன் சேர்ந்து ரீகனை சுங்கான்கடையில் உள்ள மதுக்கடைக்கு அழைத்துச் சென்ற அஜின் ஜோஸ், அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்து நான்குவழிச் சாலை அருகே இருவரும் சேர்ந்து ரீகனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments