செஸ் போட்டியில் ரோபோவை எதிர்த்து விளையாடிய சிறுவனின் விரலை உடைத்த ரோபோ..!

செஸ் போட்டியில் ரோபோவை எதிர்த்து விளையாடிய சிறுவனின் விரலை உடைத்த ரோபோ..!
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த செஸ் தொடரில் 7 வயது சிறுவனின் விரலை ரோபோ உடைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
ரஷ்ய செஸ் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற செஸ் போட்டியில் ரோபோவை எதிர்த்து சிறுவன் விளையாடிய நிலையில், ரோபோ தனது நகர்வை செய்ய சிறுவன் நேரம் கொடுக்காததால், அவரின் விரல் மீது தனது இயந்திர கைகளால் அழுத்தியதால் இந்த விபத்து நடந்துள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Comments