"நெல்லை மெஸ்" உணவகத்தில் பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி..!

0 3082

ராமேஸ்வரத்தில் உள்ள நெல்லை மெஸ் என்ற உணவகத்தில் பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, அந்த உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

கும்பகோணத்தைச் சேர்ந்த சிலர் அந்த உணவகத்தில் சாப்பிடச் சென்ற போது தோசைக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததாக உணவு பாதுகாப்புத்துறையிடம் புகாரளித்தனர்.

நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், 7 நாட்களுக்குள் சமையலறையை முறைப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டனர். தவறும் பட்சத்தில் உணவகத்திற்கு சீல்  வைக்கப்படும் என எச்சரித்து நோட்டீஸ் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments