அரசு பேருந்து இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதால் விபத்து-மகன் கண்முன்னே உயிரிழந்த தந்தை

0 4114

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே, இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஒரு நபர், தனது மகன் கண்முன்னே உயிரிழந்தார்.

கரளகம் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவரும் அவரது மகனும் ஆலப்புழா அரசு மருத்துவமனை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து இவர்களது இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்று பக்கவாட்டில் மோதியது. இதில் நிலைதடுமாறி கவிழ்ந்த இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்திருந்து பயணித்த மாதவன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். அவரது மகன் படுகாயங்களுடன் உயிர்தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments