5வது மாடியில் இருந்து தவறி விழுந்த இரண்டரை வயது சிறுமியை கைகளில் தாங்கி பிடித்து காப்பாற்றிய இளைஞர்.!

0 9955

சீனாவின் Zhejiang மாகாணத்தில் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்த இரண்டரை வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பத்திரமாக பிடித்து காப்பாற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tongxiang பகுதியில் சாலை ஒன்றில் Shen Dong என்ற இளைஞர் தனது காரை நிறுத்தி கொண்டிருந்தார். அப்போது எதிரே இருந்த உயரமான கட்டிடத்தின் 5வது மாடியில் இருந்து இரண்டரை வயது சிறுமி எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

இதனைக் கண்ட அந்த இளைஞர் கண நேரமும் தாமதியாமல் ஓடிச் சென்று சரியாக அந்த குழந்தையை தன் இரு கைகளாலும் தாங்கி பிடித்து காப்பாற்றினார். நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments