பேராசிரியரை குக்கரால் அடித்துக் கொன்றதாக மனைவி காதலனுடன் கைது..! மன்மத மருமகளை சிக்க வைத்த மாமியார்..!

0 14064
பேராசிரியரை குக்கரால் அடித்துக் கொன்றதாக மனைவி காதலனுடன் கைது..! மன்மத மருமகளை சிக்க வைத்த மாமியார்..!

வெளி நாட்டில் இருந்து திரும்பிய பேராசிரியர் மாயமான சம்பவத்தில், அவரை குக்கரால் அடித்துக் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மதுரவாடா பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருக்கும் மிருதுளா என்ற பெண்ணக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு தற்போது 7 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு முரளிக்கு வெளிநாட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியர் வேலையை கிடைத்தது. எனவே அவர் தனது மனைவி மகனுக்கு சம்பாதிப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றார்.

அண்மையில், மனைவி மற்றும் மகனை சந்திக்கும் ஆவலில் வெளி நாட்டில் இருந்து முரளி திடீரென்று வீடு திரும்பினார். இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவி மகனுடன் தனி வீட்டில் வசித்து வந்த, முரளியை பார்க்க அவரது தாய் சென்றுள்ளார்.

அங்கு முரளி இல்லாத நிலையில், 2 நாட்களாக தனது கணவரை காணவில்லை என மனைவி மிருதுளா, மாமியாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது மகன் முரளியை காணவில்லை என்றும் அவரது மனைவி மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து பேராசிரியர் மாயமானது குறித்து கண்டறிய அவரது மனைவி மிருதுளாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த போலீசார், அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

முரளி மாயமானதாக கூறப்பட்ட நள்ளிரவு மட்டுமில்லாமல் பலமுறை , அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞருடன், மிருதுளா நீண்ட நேரம் செல்போனில் பேசி இருப்பதை கண்டுபிடித்த போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணையில் பேராசிரியர் மாயமான மர்மம் விலகியது.

கணவர் வெளி நாடு சென்றிருந்த சமயத்தில் மிருதுளாவுக்கு, தன்னைவிட 10 வயது குறைந்த இளைஞர் சங்கருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வீட்டிற்கே சென்று மிருதுளாவை தனிமையில் சந்திப்பதை சங்கர் வாடிக்கையாக்கி உள்ளான்.

முரளி வெளிநாட்டிலிருந்து வந்ததால், மிருதுளாவின் ரகசிய காதல் வாழ்க்கை தடைபட்டுள்ளது. இதனால் கணவர் முரளியிடம் அவர் சரிவர பேசவில்லை என்றும் முரளியே நெருங்கி போய் பேசினாலும் கூட, மிருதுளா விலகிச் சென்றதாகவும், இது முரளிக்கு மனைவியின் நடத்தை குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனை தனது தாயை பார்க்க சென்ற போது முரளி தெரிவித்துள்ளார்.

இதற்க்கிடையே மிருதுளா அவரது காதலனை செல்போனில் அழைத்து தனது கணவர் இங்கு இருக்கும் வரை சந்திக்க இயலாது என்று கூறியுள்ளார். இதனால் எரிச்சலடைந்த காதலன் சங்கர், முரளியை கொலை செய்துவிடலாம் என்ற யோசனையை மிருதுளாவிடம் கூற, காதல் மயக்கத்தில் அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு முரளி தூங்கி கொண்டிருந்த சமயத்தில் அவரது தலையில் குக்கரை கொண்டு பலமாக ஓங்கி அடித்து கொலை செய்துள்ளார் மிருதுளா. பின்னர் காதலனை அழைத்து இருவரும் சேர்ந்து முரளியின் சடலத்தை யாரும் பார்க்காத இடத்தில் தூக்கி போட்டுள்ளனர்.

இரண்டு நாட்கள் கழித்து முரளியை தூக்கி போட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, முரளியின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது.

யாருக்கும் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக முரளியின் சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மிருதுளாவையும், காதலனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கண்டவன் மீது கொண்ட திருமணம் கடந்த விபரீத உறவால், கணவனை கொன்ற கொலைப்பழியோடு காதலனுடன் சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அந்தப்பெண்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments