அதிக வெப்பத்தால் பாறைகளை துளையிடும் நவீன கருவியை கண்டுபிடித்த அமெரிக்க நிறுவனம்

0 1909
அதிக வெப்பத்தால் பாறைகளை துளையிடும் நவீன கருவியை கண்டுபிடித்த அமெரிக்க நிறுவனம்

மிக அதிக வெப்பத்தால் பாறைகளை தொடாமலேயே சுரங்கங்களை துளையிடும் கருவியை அமெரிக்காவின் எர்த்கிரிட்  என்னும் புத்தாக்க நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இதனால் ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு துளையிட முடியும் என கூறியுள்ள எர்த்கிரிட் நிறுவனம், ஒரு மீட்டர் சுரங்கம் தோண்டுவதற்கு 300 அமெரிக்க டாலர் மட்டுமே செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தற்போதைய துளையிடும் இயந்திரங்களைவிட 100 மடங்கு கூடுதல் ஆற்றல் கொண்டதாகவும், 98 சதவிகிதம் செலவு குறைவானதாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனால், அதிக பொருட் செலவாகும் என கைவிடப்பட்ட திட்டங்கள்கூட தற்போது சாத்தியமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments