குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தில் பிரியாவிடை..!

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தில் பிரியாவிடை..!
பதவிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தில் பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சிக்கு வருகைத்தந்த ராம்நாத்கோவிந்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்று நாடாளுமன்றத்திற்கு அழைத்துவந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டாக கலந்துகொண்டனர். வருகிற 25-ம் தேதி நாட்டின் 15-வது குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்க உள்ளார்.
Comments