ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கு : மேற்கு வங்க மாநில அமைச்சர், அவரது உதவியாளரான நடிகை கைது..!

0 1996
ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கு : மேற்கு வங்க மாநில அமைச்சர், அவரது உதவியாளரான நடிகை கைது..!

ஆசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

அம்மாநிலத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அது குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், 2014 முதல் 2021ஆம் ஆண்டு வரை கல்வித்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியிடம் சி.பி.ஐ. விசாரித்து வந்தது.

மேலும், பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் அமலாக்கத்துறை, பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடத்தி, அர்பிதாவின் வீட்டில் 20 கோடி ரூபாயை கைப்பற்றியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments