தினந்தோறும் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்த பெற்றோர்

தினந்தோறும் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொலை செய்த பெற்றோர்
மதுரையில், மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை, ஸ்கிப்பிங் கயிறால் கழுத்தை நெறித்து கொலை செய்த பெற்றோர் போலீசில் சரணடைந்தனர்.
சொக்கலிங்க நகர் பகுதியை சேர்ந்த மாரி செல்வம் என்ற இளைஞர், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி மதுப்பழக்கத்துக்கு ஆளாகி, குடிப்பதற்கு பணம் கேட்டு தாய், தந்தையிடம் தகராறு செய்வது வழக்கம் என கூறப்படுகிறது.
வழக்கம் போல் நேற்றிரவு, மதுபோதையில் பெற்றோரிடம் குடிக்க பணம் கேட்டு மாரி செல்வம் தகராறு செய்த நிலையில், ஆத்திரமடைந்த பெற்றோர் அவரை கொலை செய்து பின் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Comments