தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.!

0 1714

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், கடலூர், தஞ்சை, நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் ஜூலை 27 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் வங்க கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments