ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்.!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைமன்னாருக்கும் நாச்சிகுடாவுக்கும் இடையே கடந்த புதன்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 ராமேஸ்வரம் மீனவர்களையும், அவர்களின் விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகங்களில் சுமார் 800 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Comments