இருசக்கர வாகனத்தில் சென்ற ரவுடி சரமாரியாக வெட்டி கொலை.. 3 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை எண்ணூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரவுடியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த உமர் பாஷா என்பவர் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது.
இதுதொடர்பாக எண்ணூர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் உமர் பாஷா மீது 10க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும் பிரபல தாதாவான டிபி சத்திரம் ராதா என்பவரின் வலது கரமாக திகழ்ந்து வருவதும் தெரியவந்தது .
Comments