கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு!

0 1315

சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மீட்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவிலுக்கு சொந்தமான 7 ஆயிரத்து 841 சதுர அடி நிலம் சாதுல்லா சாயுபு என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக சாயுபு வாடகைத் தொகை செலுத்தாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கில் அறநிலையத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் போலீசார் உதவியுடன்  நிலத்தை மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments