கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து வாகனங்களை இடித்துத் தள்ளிய பேருந்து.!

0 1369

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பெட்ரோல் பங்கில் புகுந்து வாகனங்களை இடித்துத் தள்ளிய சிசிடிவி வெளியாகி உள்ளது.

அதிவேகத்தில் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் நிலையத்திற்குள் புகுந்து டீசல் நிரப்பிக் கொண்டிருந்த சரக்கு வேன் மீது மோதியது.

சரக்கு வேன் மோதியதில் நிலைகுலைந்த டீசல் இயந்திரம் சரிந்து பக்கவாட்டில் நின்ற கார் மீது விழுந்தது.

அதிர்ஷ்டவசமாக தீ பற்றாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சரக்கு வேன் ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் விபத்து குறித்த சிசிடிவி வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments