இந்தியா - வங்கதேச எல்லையில் ரூ.21 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!

0 1478

இந்திய-வங்கதேச சர்வதேச எல்லையில் படகில் கடத்திவரப்பட்ட 21 கோடி ரூபாய் மதிப்பிலான 42 கிலோ தங்கத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்தியா-வங்கதேச எல்லையில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் குனர்மத் கிராமத்தில் உள்ள இச்சாமதி ஆற்றின் அருகே பாதுகாப்பு படையினர் பதுங்கியிருந்தனர்.

தொடர்ந்து, ஆள் நடமாட்டம் இருப்பதை கண்டுபிடித்த எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த இடத்தை சுற்றிவளைத்தனர். சர்வதேச எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த வாகனங்களில் இருந்து 321 தங்க பிஸ்கட்கள், 5 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments