குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றிபெற்றதற்கான சான்றிதழை வழங்கியது இந்தியத் தேர்தல் ஆணையம்

0 1915

குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றிபெற்றதற்கான சான்றிதழை இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

அதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். இந்தச் சான்றிதழின் ஒரு நகல் மத்திய உள்துறைச் செயலருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

திங்களன்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் விழாவில் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் திரவுபதி முர்மு பதவியேற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வசதியாக இரு அவைகளும் திங்களன்று முற்பகல் 11 மணிக்குப் பதில் பிற்பகல் 2 மணிக்குக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments