சென்னையில் சொத்து தகராறால் பெற்ற மகளை வீட்டில் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்திய தந்தை, சகோதரன் கைது..!

0 5922
சென்னையில் சொத்து தகராறால் பெற்ற மகளை வீட்டில் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்திய தந்தை, சகோதரன் கைது..!

சென்னை மாதாவரத்தில், சொத்து தகராறில் பெற்ற மகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்திய தந்தையும் சகோதரனையும் போலீசார் கைது செய்தனர்.

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பழனி என்பவருக்கு அனுராதா என்ற மகளும் ஹேமந்த் என்ற மகனும் உள்ளனர். அனுராதா திருமணமாகி கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தாய் இறந்துவிட்ட நிலையில் பழனி, மகள் அனுராதா பெயரில் வீட்டை எழுதி வைத்ததாகவும் இதனால் ஹேமந்த் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் வீட்டை தம்பி பெயரில் எழுதி வைக்க அனுராதா ஒப்புக் கொள்ளாததால் ஏற்பட்ட தகராறில், அனுராதாவை அவரது தந்தையும் தம்பியும் வீட்டில் தனி அறையில் பூட்டி வைத்து அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

வீட்டிலிருந்து தப்பிய அனுராதா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில், உடலில் காயங்களைக் கண்டு மருத்துவர்கள் போலீசில் புகாரளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments