பிரேசிலில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 16 குற்றவாளிகள் சுட்டுக்கொலை..!

பிரேசிலில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 16 குற்றவாளிகள் சுட்டுக்கொலை..!
பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் போலீசார் மேற்கொண்ட அதிரடி தேடுதல் வேட்டையில் 16 குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் அங்குள்ள குடிசைப்பகுதி ஒன்றை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
400 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த மோதலில் காவல்துறை அதிகாரி ஒருவரும், உள்ளூர் வாசி ஒருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments