"தமிழகத்தின் 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை மையம்

"தமிழகத்தின் 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை மையம்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், திருப்பூர், தேனி, சேலம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும், ஜூலை 25, 26ல் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் அம்மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments