மும்பை ரயிலில் திமிங்கலம் எச்சத்தை கடத்த முயற்சி.. 6 பேர் கைது..!

0 1675

நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயிலில் கடத்த முயன்ற 2 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல எச்சத்தை பறிமுதல் செய்த போலீசார், 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு இளைஞரின் உடைமையை சோதனை செய்ததில், 2 கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் என்ற அந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவன் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments