இடத்தகராறு தொடர்பாக விவசாயி மீது கணவன், மனைவி தாக்குதல்.. கழுத்தில் அரிவாள் வைத்து மிரட்டிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு..!

0 1609
இடத்தகராறு தொடர்பாக விவசாயி மீது கணவன், மனைவி தாக்குதல்.. கழுத்தில் அரிவாள் வைத்து மிரட்டிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு..!

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இடத்தகராறு தொடர்பாக விவசாயி ஒருவரின் கழுத்தில் அரிவாள் வைத்து மிரட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராயர்பாளையம் கிராமத்தை சேர்ந்த செந்தில் குமாருக்கும், கருப்புசாமிக்கும் இடையே இடத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

நிலத்தில் கம்பி வேலி அமைக்க செந்தில் குமார் முற்பட்ட போது, அங்கு வந்த கருப்புசாமி, செந்தில் குமாரின் கழுத்தில் பெரிய அரிவாளை வைத்து மிரட்டல் விடுத்தார்.

உடன் வந்திருந்த அவரது மனைவி செந்தில் குமாரை கீழே தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தினார். அங்கிருந்த ஒருவர் நடந்தவற்றை செல்போனில் பதிவு செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments