மின்சாரம் தாக்கியதில் முதிய தம்பதி உயிரிழப்பு.. நாமக்கல்லில் சோகம்..!

0 2620

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மின்சாரம் பாய்ந்து முதிய தம்பதியர் உயிரிழந்தனர்.

பாண்டமங்கலம் சந்தப்பேட்டையை சேர்ந்த பழனியம்மாள் என்பவர் தனது வீட்டை ஒட்டியுள்ள ஆட்டுக்கொட்டகைக்கு சென்ற போது அங்கு மரக்கட்டை மீது அறுந்த நிலையில் மின்கம்பி இருந்ததை கவனிக்காமல் அதனை பிடித்துள்ளார்.

அப்போது அவரை மின்சாரம் தாக்கிய நிலையில், அவரை காப்பாற்ற ஓடிச்சென்ற அவரது கணவர் பரமசிவம், பழனியம்மாளை கையில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி நேரடியாக பிடித்த போது அவரையும் மின்சாரம் தாக்கிய நிலையில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆட்டுக்கொட்டகைக்கு வீட்டில் இருந்தே வயர் மூலமாக மின்சாரம் எடுத்துச்செல்லப்பட்டிருந்த நிலையில் வயர் மீது குழாய் போடப்பட்டிருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments