அர்ஜெண்டீனா வனப்பகுதியில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பின் பிறந்துள்ள இரண்டு ஜாகுவார்கள்..!

0 2752

அர்ஜெண்டீனா வனப்பகுதியில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பின் 2 ஜாகுவார்கள் பிறந்துள்ளன.

அழிவின் விளிம்பில் உள்ள ஜாகுவார்களை மீட்டெடுக்கும் முயற்சியாக, விலங்கு நல அமைப்புகளை அவற்றை பிடித்து, இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தி குட்டிகள் வளர்ந்ததும் மீண்டும் வனப்பகுதியில் விட்டு வருகின்றன.

அவ்வாறு கடந்தாண்டு விடப்பட்ட ஜாகுவார் ஒன்று 2 குட்டிகளை ஈன்றுள்ளது. 70 ஆண்டுகளுக்கு பின் ஜாகுவார்கள் வனப்பகுதியில் பிறந்துள்ளதால் விலங்கு நல ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அர்ஜெண்டீனா வனப்பகுதியில் வெறும் 250 ஜாகுவார்கள் மட்டுமே உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments