4 தலைமுறைக்கு சொத்து சேர்த்துவிட்டோம்.. கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை.!

காந்தி, நேருவின் பெயர்களை பயன்படுத்தி போதுமான அளவு சம்பாதித்துவிட்டதாக கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் விசாரணை நடைபெற்று வருவதை கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில்
பேசிய எம்.எல்.ஏ ரமேஷ் குமார், நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் பெயர்களை கூறி 4 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டதாகவும், அதற்கு தற்போது கைமாறு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Comments