ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதிவரை வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றுங்கள் - பிரதமர் நரேந்திர மோடி

நாட்டு மக்கள் அனைவரும் வருகிற ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடு 75 வது ஆண்டு விடுதலை பெருவிழாவை கொண்டாடும் நிலையில், ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுவதன் மூலம் விழாவை மேலும் வலுப்படுத்துவோம் என்று பிரதமர் தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Comments