பள்ளியின் 2-வது மாடியில் இருந்து குதித்த 9ஆம் வகுப்பு மாணவி

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் அரசுப் பள்ளி மாடியில் இருந்து குதித்த 9ஆம் வகுப்பு மாணவி மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பள்ளியின் 2-வது மாடியில் இருந்து மாணவி குதித்த நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற மாணவி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
Comments