44-ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்: இந்தியா சார்பில் மேலும் ஒரு மகளிர் அணி பங்கேற்கும் என அறிவிப்பு!

0 1253

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 5 பேர் கொண்ட மேலும் ஒரு மகளிர் அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடர் வருகிற 28-ஆம் தேதி முதல் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.

சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments