ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.62,500 பணத்தை ரயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்.!

0 4582

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையம் அருகே பயணி ஒருவர் தவறவிட்ட 62 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்து ரயில் நிலைய அதிகாரியிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

சீர்காழி ரயில் நிலையம் வளாக சாலையில் பயணி ஒருவர் தவறவிட்ட பணத்தை அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர் சரவணன் பார்த்து எடுத்துள்ளார்.உடனடியாக அப்பணத்தை ரயில் நிலைய அலுவலர் மணிகண்டனிடம் ஒப்படைத்துள்ளார்.

நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர் பணத்தை ஒப்படைத்ததை அறிந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments