காரை விபத்துக்குள்ளாக்கிய கல்லூரி மாணவர்களை கடத்தி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்-வக்கீல் உள்பட்ட 5 பேர் கைது

0 646

சென்னையில் வாடகைக்கு எடுத்து சென்ற காரை விபத்துக்குள்ளாக்கி சேதப்படுத்திய 2 கல்லூரி மாணவர்களை கடத்தி 2 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய வக்கீல் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த பொறியியல் மாணவர்கள் வெங்கடேசன் என்பவரின் காரை வாடகைக்கு எடுத்து ஓட்டியபோது, விபத்தில் சிக்கி கார் சேதமடைந்தது. இதற்காக 20,000 ரூபாய் பெற்றுக்கொண்ட வெங்கடேசன், மேலும் 2 லட்ச ரூபாய் தருமாறு மாணவர்களிடம் கேட்டுள்ளார். தர மறுக்கவே, கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து அந்த மாணவர்களை காரில் அழைத்து சென்ற வெங்கடேசன் ஒரு அறையில் அடைத்து சரமாரியாகத் தாக்கி பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

பீகாரில் உள்ள உறவினர்களை தொடர்பு கொண்ட மாணவர்கள் நடந்ததை கூறி பணம் கேட்டுள்ளனர். அவர்கள் போலீசில் புகார் அளிக்கவே, செல்போன் சிக்னலை வைத்து போலீசார் மாணவர்களை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments