பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

0 1436

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 26 மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.

மாணவிகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.

மதியம் சாதம், சாம்பார், அவித்தமுட்டை ஆகியவை உணவாக வழங்கப்பட்ட நிலையில், அது குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments