வாரிசு சான்றிதழுக்கு ரூ.10,000 லஞ்சம் கேட்ட வட்டாட்சியரை வளைத்து பிடித்த அதிகாரிகள்

0 1638

கரூர் மாவட்டதில் வாரிசு சான்றிதழ் வழங்க 10,000 ரூபாய் லஞ்சம் கேட்ட வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தந்தை இறந்ததால், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்த பழனிச்சாமி என்பவரிடம், வட்டாட்சியர் ராஜசேகரன் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பழனிசாமி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், ராஜசேகரன் பணம் வாங்கும் போது அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments