கேப்சியூல்களில் ஹெராயின் போதைப் பொருளை அடைத்து சென்னைக்கு கடத்தி வந்த தன்சானியா நாட்டு பயணி கைது.!

கேப்சியூல்களில் ஹெராயின் போதைப் பொருளை அடைத்து அதனை விழுங்கி, சென்னைக்கு கடத்தி வந்த தன்சானியா நாட்டு பயணியிடம் இருந்து சுமார் 1.226 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
எத்தியோப்பியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர் சந்தேகத்திற்கிடமான பொருளை விழுங்கியது தெரியவந்தது.
பின்னர் மருத்துவர்களின் உதவியுடன் அவரது வயிற்றில் இருந்து அவற்றை அகற்றி பார்த்த போது, மொத்தமாக 86 கேப்சியூல்களில் ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் 8.86 கோடி ரூபாய் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments