திருச்சியில் வெளிநாட்டவர்கள் உள்ள சிறப்பு முகாமில் அமலாக்கத் துறையினர் சோதனை.!

திருச்சியில் வெளிநாட்டவர்கள் உள்ள சிறப்பு முகாமில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 143 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நேற்றுத் தேசியப் புலனாய்வு முகமையினர் 13 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். . இந்நிலையில் இன்று அமலாக்கத்துறைத் துணை இயக்குநர் அஜய் கவுர் தலைமையிலான அதிகாரிகள் இவர்களிடம் வங்கிப் பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments