தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

0 1507

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நாளை வரை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments