தற்காலிக ஆசிரியர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி முன்பு சமர்பிக்க ஆணை.!

0 945

தற்காலிக ஆசிரியர் நியமன வழக்கை தலைமை நீதிபதி முன்பாக சமர்பிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இட ஒதுக்கீடு, முன்னுரிமை உள்ளிட்டவை குறித்த முறையான வழிகாட்டுதல்கள் இல்லாத தமிழக அரசின் தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பும், மதுரைக்கிளையின் தீர்ப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளதால், தலைமை நீதிபதி அமர்வு முன்பாக சமர்ப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடுவதாக நீதிபதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments