அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் செவிலியரை தாக்கிய போதை ஆசாமி.!
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் செவிலியரை தாக்கியதோடு, பணியாளரையும் மதுபாட்டிலால் தாக்கிய போதை ஆசாமியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்ற அப்துல் ரகுமான் என்பவர், வயிற்று வலிக்கு மாத்திரை கேட்டுள்ளார். செவிலியர் மாத்திரை எடுத்துக் கொண்டிருந்த போதே அவருடன் வாக்குவாதம் செய்த அவர், செவிலியரின் கழுத்தை நெறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
செவிலியர் கத்திக் கூச்சலிட்டதும் காப்பாற்ற வந்த பணியாளர் சதாசிவத்தையும், அவர் மதுபாட்டிலால் சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்ததும் போதை ஆசாமி தன்னைத் தானே வயிற்றில் மதுபாட்டிலால் குத்திக் கொண்ட நிலையில், காயமடைந்த இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments