மதுரையில் சுங்கச்சாவடி ஊழியர் மீது லாரி மோதி விபத்து.!
மதுரை கப்பலூரில் சுங்கச்சாவடி ஊழியர் மீது லாரி மோதிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
நேற்று அதிகாலை சுங்கச் சாவடியை கடக்க முயன்ற காய்கறி லாரி ஒன்றின் Fast Tag தானியங்கி கருவியில் ஸ்கேன் ஆகவில்லை எனத் தெரிகிறது. இதனால் அங்கிருந்த தினேஷ் என்ற ஊழியர் கன் மிஷின் மூலம் Fast Tag-ஐ ஸ்கேன் செய்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த மற்றொரு லாரி, காய்கறி லாரி மீது மோதியதில் திணேஷ் தடுப்பை தாண்டி தூக்கி வீசப்பட்டார். எனினும் அவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
Comments