இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்கே..!

0 1880

இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே, இன்று பதவியேற்றுக்கொண்டார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டங்களில் சிக்கி தவிக்கும் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை ரணில் விக்கிரசிங்கே புதிய அதிபராக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். 134 எம்.பி.க்களின் ஆதரவுடன் இலங்கை அதிபராகியுள்ள ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அந்நாட்டு தலைமை நீதிபதி ஜெயந்தா ஜெயசூர்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments