எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு!

0 616

எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தலைமன்னாருக்கும்-நாச்சிகுடாவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில், ஒரு படகில் இருந்த 5 மீனவர்கள் இயந்திர கோளாறு காரணமாக காற்றின் வேகத்தால் எல்லைத் தாண்டி வந்ததாக தெரிவித்ததை அடுத்து, அவர்கள் 5 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

மற்றொரு படகில் இருந்த 6 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments