பாடகர் சித்து மூசாவாலவைக் கொலை செய்த ரவுடிகள் 5 மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டுக்கொலை!

0 3178

பஞ்சாபில் பாடகர் சித்து மூசாவாலவைக் கொலை செய்த ரவுடிகள் இரண்டு பேர் 5 மணி நேர என்கவுண்டருக்குப் பிறகு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சண்டையில் 3 காவலர்களும் ஒரு செய்தியாளரும் காயம் அடைந்தனர். அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பக்னா என்ற ஆளரவமற்ற கிராமத்தில் சித்துவை கொலை செய்த கொலையாளிகளை போலீசார் சுற்றி வளைத்த போது இருதரப்பினருக்கும் இடையே பல மணி நேரமாக துப்பாக்கிச் சண்டை நீடித்தது.

உயிரிழந்த ரவுடிகள் மன்பிரீத், ஜக்ரூர் ரூபா என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ரவுடிகளிடமிருந்து ஏகே 47 கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments