மலை ரிசார்ட்டில் வெடிகுண்டு தாக்குதல் - 9 சுற்றுலா பயணிகள் பலி

0 3956

ஈராக்கின் Dohuk மாகாணத்தில் உள்ள மலை விடுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குழந்தை உள்பட 9 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

மலை விடுதியில் இருந்த 23 சுற்றுலா பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். துருக்கி தான் தாக்குதல் நடத்தியதாக ஈராக் குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு துருக்கி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

குர்தீஷ் படைகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் மலை விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகள் உயிரிழப்பை கண்டித்து தலைநகர் பாக்தாத்தில் உள்ள துருக்கி தூதரகம் முன் மக்கள் கலவர போராட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments