ப்ரீ பயர் குரூப் நிஜத்தில் கல்வீச்சு தேவாலயம் உடைக்கப்பட்டது..! முட்டி போட வைத்து கொடுமை

0 3118

திருவண்ணாமலை மாவட்டம் பெரியக்கல்லப்பாடி கிராமத்தில் பிரீபயர் விளையாடிய இளைஞர்கள் , சிறுவர்களை முட்டிப்போட வைத்து தண்டனை வழங்கியதை கண்டித்த , மக்கள் மீது இளைஞர்கள் கல்வீசியும் கட்டைகளாலும் தாக்கியதால் பெரும் பரபரப்பு உருவானது. நிழலுக்கு அமர்ந்து விளையாடிய தேவாலயத்தையே உடைத்த விபரீத பிரீபயர் பாய்ஸ் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகல்லப்பாடி கிராமத்தில் அருந்ததியர் காலனியில் உள்ள அந்தோணியார் தேவாலயம் முன்பு அங்குள்ள அண்ணா நகர் காலனி இளைஞர்கள் அமர்ந்து பிரீபயர் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அங்கு பிரீ பயர் விளையாடிக் கொண்டிருந்த சில சிறுவர்களை பிடித்து முட்டிபோடவைத்து தண்டனை வழங்கி உள்ளனர். இதனை பார்த்த சிறுவர்களின் பெற்றோர் இளைஞர்களை எச்சரித்து அனுப்பி உள்ளனர். இதையடுத்து தங்கள் பகுதிக்கு சென்று கூடுதல் இளைஞர்களை திரட்டி வந்த பிரீபயர் பாய்ஸ் அங்கிருந்த மக்களை கல்வீசி தாக்கினர்.

அவர்கள் செய்யும் அட்டூழியத்தை படம் பிடிப்பதை பார்த்து அதிக அளவில் கற்களை வீசியதால் அங்கிருந்த ஆண்களும் பெண்களும் பாதுகாப்புக்காக அடைக்கலம் தேடி அந்தோணியார் ஆலயத்துக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். அப்போதும் அடங்காமல் அத்துமீறி கல்வீசி தாக்கியது அந்த கும்பல்..!

ஒருகட்டத்தில் தேவாலயத்தின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியது. அந்தக்கும்பலில் உள்ள இளைஞரின் தாய் ஒருவர் வந்து பிரீ பயர் பாய்ஸை சத்தம் போட்டு அங்கிருந்து அழைத்துச்செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்த தாக்குதலில், தினகரன் என்பவரின் மளிகைகடை, அந்தோணியார் தேவாலயம், இருசக்கரவாகனங்கள் சேதமடைந்தன. சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி அந்த பகுதி மக்கள் திருவண்ணாமலை - திருக்கோவிலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை கொண்டு ஊருக்குள் புகுந்து கல்வீசி கலவரம் செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments