நடப்பு ஆண்டில் இதுவரை ரயில்வேக்கு ரூ. 259.44 கோடி இழப்பு

நடப்பு ஆண்டில் ரயில்வேக்கு 259 கோடியே 44 லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் ரயில்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்தகைய இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஜூன் 14ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை ரயில்கள் ரத்து காரணமாக சுமார் 102 கோடியே 96 லட்சம் ரூபாய் அளவிற்கு ரயில் கட்டணம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments