ரயில்களில் ரத்து செய்யப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது - ரயில்வே அமைச்சர்

0 1361

ரயில்களில் ரத்து செய்யப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என்று  ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், குறைந்த கட்டணம் மற்றும் பல்வேறு வகையான பயணிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளால் ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.

கொரோனா பாதிப்புக்குப் பின் கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வே வருவாய் குறைந்து நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments