தானம் செட்டில்மெண்ட் செய்து ஒரிஜினல் மூலப்பத்திரம் வழங்க ரூ.7000 லஞ்சம் பெற்ற பொறுப்பு சார் பதிவாளர் கைது..!

0 2681

கடலூர் மாவட்டம் திருமுட்டத்தில் தானம் செட்டில்மெண்ட் செய்து ஒரிஜினல் மூலப்பத்திரம் வழங்க 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொறுப்பு சார் பதிவாளர் பழனிவேலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

வேல்முருகன் என்பவர் தனது தந்தையின் 3 ஏக்கர் நிலம் மற்றும் இரண்டு வீட்டை தான செட்டில்மெண்ட் செய்து மூலப்பத்திரத்தை வாங்க திருமுட்டம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது பொறுப்பு சார்பதிவாளர் பழனிவேல் மற்றும் உதவியாளர் எழிலரசன் ஆகியோர் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தை வேல்முருகன் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறுப்பு சார் பதிவாளர் பழனிவேல், உதவியாளர் எழிலரசன் ஆகியோரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments