தவறான தகவல் அளித்த எஸ்.பி.ஐ. ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை.!

0 5538

இன்சூரன்ஸ் பெற விண்ணப்பிக்கும் போது தவறான தகவல் அளித்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மற்றும் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மணலி கிராமத்தைச் சேர்ந்த விமலா திருத்துறைப்பூண்டியில் விவசாய ஈடுபொருள் நிறுவனம் நடத்தி வந்த நிலையில், தனது நிறுவன பொருட்களுக்கு எஸ்.பி.ஐ. ஜெனரல் இன்சூரன்ஸ் மூலம் காப்பீடும் எடுத்திருந்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது விமலா இன்சூரன்ஸ் தொகைக்கு விண்ணப்பித்த போது பிரியம் செலுத்தவில்லை என கூறி மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து  விமலாவுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments