அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

0 3252

வருகிற 29ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில்
பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் வருகிற 28ஆம் தேதி 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளார்.

இதற்காகச் சென்னைக்கு வரும் பிரதமர், மறுநாள் (ஜூலை 29ஆம் நாள்) அண்ணா பல்கலைக் கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments