+2 விடைத்தாள் மதிப்பெண் கூட்டலில் குளறுபடி.. தவறிழைத்த ஆசிரியர்கள் நேரில் ஆஜராக உத்தரவு!

0 14228

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் கூட்டலில் தவறிழைத்த 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வுத்துறை இணை இயக்குநரிடம் மன்னிப்பு கடிதம் அளித்துள்ளனர்.

+2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களை மாணவர்கள் சரி பார்த்தபோது தாங்கள் பெற்றதை விட குறைவான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

85 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு, மதிப்பெண் கூட்டலில் ஏற்பட்ட தவறால் 55 மதிப்பெண்கள் என்றும், 76 மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு வெறும் 6 மதிப்பெண்கள் என்றும் பதிவு செய்யப்பட்டிந்ததாக கூறப்படுகிறது.

மதிப்பெண் கூட்டலில் தவறிழைத்த 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தேர்வுத்துறை இயக்கம் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments