கள்ளக்குறிச்சி விவகாரம்-போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட இளைஞர்கள் கைது

0 2106

கள்ளக்குறிச்சி பிளஸ் 2 மாணவி மரணம் தொடர்பாக போராட்டத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட திருப்பூர், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர்...

திருப்பூர் மாவட்டம் காங்கயம் சிவன்மலையை சேர்ந்த அருண்குமார் மற்றும் உடுமலை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் தனித்தனியாக வாட்ஸ் ஆப் குரூப்பில் அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதையடுத்து அவர்களை திருப்பூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சேலம் ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்த வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் அழைப்பு விடுத்த தனியார் கல்லூரி மாணவரை சேலம் ஆட்டையாம்பட்டி போலீசார் கைதுசெய்தனர். இதனையடுத்து ரயில் நிலையம் முன்பு மாநகர துணை ஆணையர் லாவண்யா தலைமையில் 3 உதவி ஆணையர்கள் உள்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பேராட்டம் நடத்த வாட்ஸ்ஆப் அமைத்து ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறி ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலரை போலீசார் நேற்று இரவு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆலங்குடி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments